போலீஸ் விசாரணை நடிகை கங்கனா, சகோதரி ஆஜர்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ரங்கனா ரனாவத்தும், அவருடைய சகோதரி ரங்கோலி சண்டலும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளிலும்,  டிவி பேட்டிகளிலும் இனம், மதம், மொழியின் பெயரால் மக்களிடையே மோதலை தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலைய போலீசார், அவர்களை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், பலமுறை ஆஜராகாமல் இருந்த அவர்கள், நேற்ற காலை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் சில மணி நேரம் விசாரித்த பிறகு, புறப்பட்டு சென்றனர்.

Related Stories:

>