×

16 நாட்களுக்கு பிறகு இந்தியா - இங்கி. இடையே விமான சேவை துவங்கியது

புதுடெல்லி: இங்கிலாந்தில் இருந்து வீரியமிக்க மரபணு மாற்றம் பெற்ற கொரோனா பரவியதால், இந்தியா-இங்கிலாந்து இடையிலான விமான சேவை கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இந்தியா-இங்கிலாந்து இடையே வாரத்துக்கு 30 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்தார். இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. லண்டனில் இருந்து நேற்று 256 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லியை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று லண்டனில் இருந்து டெல்லிக்கு 291 பயணிகளுடன் 2 விமானங்களும், நாளை 481 பயணிகளுடன் ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இரு ந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நெகடிவ் என சோதனை முடிவு வந்தவர்களையும் 7 நாட்கள் சமூக தனிமைப்படுத்தலிலும், 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவுறுத்தி உள்ளது.

Tags : 16 days later India - Eng. In between the air service started
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...