வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

நாகை: நாகையில், தங்கை வீட்டுக்கு நடந்த சென்ற விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் வைத்து கூட்டாக பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த 40 வயது விதவை பெண் கட்டிட வேலைசெய்துவந்தார்.  இவரது கணவர் இறந்து விட்டார். 16,13 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அந்த பெண்ணை திடீரென பைக்ககில் வந்த 2 பேர் வழிமறித்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் வாயை துணியால் பொத்தி பைக்கில் உட்காரவைத்து, அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குள் சென்றனர். கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால், சிலைக்கு பின்பக்கம் வைத்து கூட்டாக மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதன்பின், யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை காட்டி  மிரட்டிவிட்டு 2 பேரும் பைக்கில் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் நேற்று காலை புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வண்டிப்பேட்டையை சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ்(24), அக்கரைகுளத்தை சேர்ந்த ஆனந்த்(22) ஆகிய இரண்டு பேரும் அந்த பெண்ணை பைக்கில் தூக்கி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஐ.பி.சி. 376(பலாத்காரம்), 506 பிரிவு 2(கொலை மிரட்டல்), 294(பி) (அசிங்கமாக பேசுதல்) உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணிடம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்தனர், வேலைக்கு சென்றுவீடு திரும்பிய விதவை பெண்ணை தூக்கி சென்று கோயிலுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>