×

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழப்பு

சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். விரைவு ரயில் மோதி பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நிகிதா (19) உயிரிழந்தார்.சென்னையில் தாம்பரம் அருகே கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா என்ற மாணவி தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.அவர் சைக்காலஜி படித்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இன்று பணிக்காக செல்லும் போது தாம்பரம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை செல்போன் பேசியபடி கடக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த மாணவிவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்….

The post தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Impulliore ,tambaram ,Chennai ,Irampuliore ,Thambaram ,Dumbar ,IronBuliore ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...