லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிமீறல் சலூன் கடையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

லண்டன்: லண்டனில் உள்ள சலூன் கடையில் கொரோனா விதிகளை மீறிய நடிகை பிரியங்கா ேசாப்ராவை அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தொற்று பரவாமல் தடுப்பதற்காக பெண்களின் முடி அழகு மையம், டாட்டூ பார்லர்கள், ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவை  மூடப்பட்டுள்ளன. இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள சலூன்  கடைக்கு சிகை அலங்காரத்திற்காக பிரியங்கா சோப்ரா சென்ற போது, அங்கு அவர் கொரோனா விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று பிரியங்கா சோப்ராவை எச்சரித்து வந்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ‘மெயில் ஆன்லைன்’ என்று ஊடகத்திடம் கூறுகையில், ‘பிரியங்கா சோப்ரா கொரோனா  விதிகளை மீறியதாக மாலை 5.40 மணிக்கு  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று, அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் தொடர்பான அனைத்து  விதிகளையும் பின்பற்றுமாறு  பிரியங்கா சோப்ராவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. பிரியங்கா சோப்ரா, தனது செல்ல நாய் மற்றும் அவரது தாய் மது சோப்ராவுடன் சலூனில் இருந்தார்’ என்றார்.

Related Stories:

>