×

கன்னியாகுமரி - எர்ணாகுளம் தனியார் ரயில்: விரைவில் ஓட தொடங்கும்

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி - எர்ணாகுளம் இடையே தனியார் ரயில் விரைவில் ஓட தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ரயில் சேவை படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி - லக்னோ, அகமாதாபாத் - மும்பை இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டன.  இவை இரண்டும் லாபகரமாக ஓடுவதால் கூடுதல் தடங்களில் தனியார் ரயில்களை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் 12 மையங்களாக பிரித்து 152 தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மையத்தில் 28 தனியார் ரயில்கள் இயங்கப்படும். இதில் கன்னியாகுமரி - எர்ணாகுளம், கொச்சுவேளி - லும்டிங் (அஸ்ஸாம்), கொச்சுவேளி - எர்ணாகுளம், சென்னை - மங்களூரு ஆகிய ரயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.கொச்சுவேளி - லும்டிங் ரயில் கொச்சுவேளியில் இருந்து வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும், லும்டிங்கில் இருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும் புறப்படும். இந்த தடத்தில் 18 நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன.

இதேபோல கொச்சுவேளி - எர்ணாகுளம் ரயிலும் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும். புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ெகாச்சுவேளியில் இருந்தும், எர்ணாகுளத்தில் இருந்து வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும் இந்த ரயில் புறப்படும். இந்த ரயிலுக்கு ெகால்லம்,கோட்டயம் என 2 நிறுத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி - எர்ணாகுளம் தினசரி ரயிலாக இயக்கப்படுகிறது. இது தினமும் காலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, 12 மணிக்கு எர்ணாகுளம் ெசன்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30க்கு கன்னியாகுமரியை வந்தடையும். இந்த தடத்தில் 4 நிறுத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சென்னை - மங்களூரு ரயில் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்தும், புதன்கிழமைகளில் மங்களூருவில் இருந்தும் புறப்படும். இந்த ரயிலுக்கு 8 நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன.

Tags : Kanyakumari - Ernakulam Private Train , Kanyakumari - Ernakulam Private Train: Will start running soon
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...