×

8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கண்டனத்திற்குரியது... மு.க.ஸ்டாலின் டுவிட்.!!!

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா  உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 44-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தியது. இருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ  உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் 7 கட்டகளாக நடத்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், டெல்லி விஜியன் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான குழுவினர், 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 8ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார். விவசாயிகளோ வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இருப்பினும், 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், வரும் ஜனவரி 15-ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்று  நிராகரிகரித்திருப்பது கவலைக்குரியது; அதேசமயம் மிகுந்த கண்டனத்திற்குரியது! நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்பதை தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்  சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Phase ,talks ,government ,MK Stalin , Phase 8 of the talks failed: The central government's rejection of the farmers' demand is reprehensible ... MK Stalin's tweet. !!!
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...