அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமாகா 100 சதவீத உழைப்பை கொடுக்கும் : ஜி.கே.வாசன்

சென்னை:தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி சென்னை மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று அடையாறு ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் கொட்டிவாக்கம் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ஜவஹர்பாபு, ரயில்வே ஞானசேகரன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ராஜம் எம்.பி நாதன், பால சந்தானம், ஆர்.எஸ்.முத்து மற்றும் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, ரவிச்சந்திரன், அண்ணாநகர் ராம்குமார், ராயபுரம் பாலா உட்பட சென்னை மண்டலத்துக்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்ட

 தமாகாவை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் உள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமாகா 100 சதவீத உழைப்பை கொடுக்கும். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளார். அவரையே நாங்களும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து சுமூகமாக பேசி தொகுதிகளை பெறுவோம். தமாகாவின் பலத்துக்கு ஏற்றவாறு அந்த தொகுதிகள் இருக்கும். தமாகாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.தமாகா தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும். இந்த தேர்தலுக்கு பின்னர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைக்காக தமாகா உறுப்பினர்கள் குரல் ஒலிக்கும். சின்ன பிரச்னை அதிமுக கூட்டணியில் இல்லை. ரஜினியை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வருவார் என்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை நல்லவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>