×

கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்..!!!

சென்னை: விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ. 40.73 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள் மற்றும் ஒரு இரயில்வே கீழ்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அதனை திறந்து வைத்தார். அதன் விவரங்கள் முன்வருமாறு காண்போம்;

சேலம்:  சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், திருச்செங்கோடு - அரியானூர் சாலை கி.மீ.32/4 (தேசிய நெடுஞ்சாலை 544) அரியானூரில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் திறக்கப்பட்டது.

மேலும்: மேலும், விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம் வட்டம், ராஜபாளையம் - அய்யனார்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  பாலம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் வட்டம், திசையன்விளை - உடன்குடி சாலை, மணிநகரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  பாலம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி வட்டம், செங்கமேடு - மணமடை - வெட்டிக்காடு சாலை, செங்கமேட்டில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் திறக்கப்பட்டது.  

தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பூலாநந்தபுரம் - குச்சனூர் சாலை, பூலாநந்தபுரத்தில் ரூ. 6.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், காந்திஜி சாலை, கண்ணப்பன் நகரில், பீளமேடு மற்றும் கோயம்புத்துலீர் வடக்கு இரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள கடவு எண். 13-க்கு மாற்றாக ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்பாலம் திறக்கப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டம்  - வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை - சந்துமலை சாலை, புங்கமடுவில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டிலும்; ஆத்தூர் வட்டம், சேலம் - உளுந்தூர்பேட்டை -அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Tags : Chief Minister ,bridges ,districts ,Coimbatore , CM opens 6 newly constructed bridges in 6 districts including Coimbatore, a railway underpass .. !!!
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...