அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல!: அன்புமணி

சென்னை : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தேர்வுகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல! 2019-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி அஞ்சல்துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாத நிலையில், அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது!இத்தகைய சூழலில் அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறு. பெரும்பான்மையான போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல்துறை தேர்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்!, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>