×

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் - இ- தொய்பா தீவிரவாத அமைப்பு தலைவர் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இஸ்லாமாபாத் : மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 166 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக இந்திய உளவு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டரான ஜகியுர் ரஹ்மான் லக்வி இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டி தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தஇந்தியா, லக்வியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண் டது. எனினும், பாகிஸ்தான் அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, ஜகியுர் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் போலீஸார் கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர், 2015 முதல் அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு லக்வி நிதியுதவி வழங்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதன்பேரில், பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், லக்வி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதன் பேரில், லக்வியை தீவிரமாக தேடி வந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் அருகே அவரை சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதைத் தொடர்ந்து லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத அமைப்பு தலைவர் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Lakhvi ,group ,mastermind ,Mumbai ,prison ,terror attacks , Lashkar-e-Taiba, Lakhvi, years, imprisonment
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...