கொரோனா தடுப்பூசி முதலில் பிரதமர் மோடிக்கு செலுத்தப்பட வேண்டும் : காங்கிரஸைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தல்!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி முதலில் பிரதமர் மோடிக்கு செலுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதை போன்று மோடியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்த நிலையில், இதே கருத்தை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாதின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அவர்களும் தெரிவித்துள்ளார்.

மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே தாமும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் குறிப்பிட்ட நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் சோதனையில் விலக்கு அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்தை 3ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், சஷி தரூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

More