திமுகவை ஆட்சியில் அமர்த்துவதே நமது ஒரே இலக்கு : உதயநிதி ஸ்டாலின் உறுதி

விழுப்புரம், :விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரத்தை தொடங்கி வைத்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் 19ம்தேதி முதல் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரத்தை தொடங்கி மாவட்டம் தோறும் நான் பேசி வருகிறேன். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே இளைஞர்கள் அதிகம் உழைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சென்று அதிமுக ஆட்சியின் அவலங்களையும், வேதனைகளையும், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் பேசி வருகிறேன

இங்கு வந்துள்ள இளைஞர்கள் பிரசாரத்தை உள்வாங்கி பம்பரமாக செயல்பட்டு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நான் எங்கு சென்றாலும் எழுச்சியான வரவேற்பு அளிக்கிறார்கள். ஆட்சி மாற்றம் உறுதி. கடந்த மக்களவை தேர்தலில் அளித்த வெற்றியைப்போல் வர இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும். திமுகவை ஆட்சியில் அமர்த்துவது நமது ஒரே இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>