×

அதிமுக கூட்டணியில் 40 தொகுதி கேட்டு நிர்பந்தம் செய்யவில்லை: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

மதுரை : அதிமுக கூட்டணியில் 40 தொகுதி கேட்டு நிர்பந்தம் செய்யவில்லை என பாஜ மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘பாஜவில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் தை 1ம் தேதி முதல் பரப்புரை  மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அதுவே பாஜகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்.

அண்ணன் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அவர் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம்.அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் மத்திய அரசு சேர்க்கும். கல்பாக்கம் அணுமின் நிலைய தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. அதனால்தான் மும்பையில் தேர்வு நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜ 40 தொகுதி கேட்டு எந்த நிர்பந்தமும் செய்யவில்லை’ என்றார்.



Tags : AIADMK ,L Murugan ,interview ,BJP , AIADMK, BJP, leader, L. Murugan
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...