×

முதல்வர் குறித்து அவதூறு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

ஈரோடு: தென்காசி மாவட்டம், ராயகிரி பகுதியை சேர்ந்தவர் நாச்சாடலிங்கம். இவரது மகன் ஞானசேகரன் (34). பொறியியல் பட்டதாரியான இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தார். நாம் தமிழர் கட்சியில் வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.  கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் திமுக மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி மிகவும் அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒன்றை  முகநூலில் பதிவு செய்திருந்தார். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஞானசேகரனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். இதனிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஞானசேகரனை நீக்க சீமான் உத்தரவிட்டுள்ளார்….

The post முதல்வர் குறித்து அவதூறு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : party ,chief minister ,Erode ,Nachadalingam ,Rayagiri, Tengasi District ,ganasekaran ,Dinakaran ,
× RELATED கட்சியில் இருந்து வெளியேறிய துரோகியை...