×

4வது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்.... இந்திய அணியை வம்பிக்கிழுக்கும் ஆஸி. கேப்டன்!

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின், இந்திய அணி கிரிக்கெட் உலகில் பெரிய சக்தி எனக் கூறி கிண்டல் செய்துள்ளார். இந்திய அணி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், போட்டியை அவர்கள் மும்பையில் வைத்தாலும் நாங்கள் அங்கே சென்று ஆடுவோம் என அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடர் முதலில் நன்றாக துவங்கியது. எந்த சர்ச்சையும் இருக்காது என ஆஸ்திரேலிய அணி கூறி வந்தது.

இந்திய அணி முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தாலும், இரண்டாவது டெஸ்டில் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் தான் ஆஸ்திரேலியாவின் உண்மையான ஆட்டம் துவங்கியது. இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் பின்பற்ற வேண்டிய விதிகளை பின்பற்றவில்லை என்றனர். அடுத்து நான்காவது டெஸ்ட் நடைபெற உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில்நகரில் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரக் கூடாது என கூறி உள்ளனர். அந்த விதிமுறைகளை பின்பற்ற விருப்பம் இல்லை என்றால் இந்திய அணி பிரிஸ்பேன் நகருக்குள் வர வேண்டாம் என அந்த மாநில அமைச்சர்கள் கூறி சீண்டி உள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடாது என வெளியாகி இருக்கும் செய்திகள் குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் பேசி உள்ளார். இந்திய அணியிடம் இருந்து இப்படி ஒரு தகவல் வெளியாகி இருப்பதால் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்திய அணி கிரிக்கெட் உலகில் சக்தி வாய்ந்தது. எங்களைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் போட்டியை ஆடி முடித்து விட வேண்டும். நாங்கள் இப்போது இந்த வாரத்தில் கவனம் செலுத்துவோம். அடுத்த வாரம் என்ன நடக்கிறதோ அதற்கேற்ப மாறிக் கொள்வோம். இவ்வாறு டிம்பெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், ``போட்டி எங்கே நடக்கிறது என்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களை அழைத்து, மும்பையில் அந்த போட்டி நடைபெறும் எனக் கூறினால் நாங்கள் விமானம் ஏறி ஆட தயாராக இருக்கிறோம்’’ என இந்திய அணியை டிம் பெயின் சீண்டும் வகையில் கூறி உள்ளார்.

Tags : Test ,Aussie ,Indian ,team , Doubtless playing in the 4th Test .... Aussie vampikkilukum Indian team. Captain!
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்