ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; ஒடிசா முதல் வெற்றி பெறுமா?.. கேரளாவுடன் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- எப்சி கோவா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க 1-1 என போட்டி சமனில் முடிந்தது. இன்று இரவு  7.30 மணிக்கு நடக்கும் 50வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி- ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.

கேரளா 8 போட்டியில் ஒரு வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், ஒடிசா 8 போட்டியில் 2 டிரா, 6 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இன்று ஒடிசா வெற்றி கணக்கை தொடங்குவதற்காகவும், கேரளா 2வது வெற்றிக்காகவும் களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், 5ல் கேரளாவும், 3ல் ஒடிசாவும் வென்றுள்ளன. 6 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

Related Stories:

>