பெண்கள் விரோத அதிமுக ஆட்சி: உதயநிதி தாக்கு

மண்ணச்சநல்லூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம், தொட்டியம், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 2வது நாளாக இன்றும் அவர் திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். காலை11 மணியளவில் மண்ணச்சநல்லூரில் எதுமலை பிரிவு ரோட்டில் அவர் பேசியதாவது: ஆறரை கோடி ரூபாய் டெண்டர் ஊழல் செய்தது எடப்பாடியோட சம்பந்திதான் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபிப்பார். பெண்களுக்கு எதிரான ஆட்சி அதிமுக ஆட்சி. 48 நாட்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அதிமுக அரசு குரல் கொடுக்கவில்லை.

மாறாக வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறது. ஏர்போர்ட் மற்றும் ரயில்நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மக்களுக்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே வரும் சட்டமன்ற ேதர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>