×

அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு: தேர்வாளர்கள் அதிர்ச்சி

சென்னை: அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு பிப்ரவரி 14 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறை பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் கடிதங்களை பட்டுவாடா செய்து வருகிறது. நாட்டின் எந்த ஒரு இடத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் கடிதங்களை பட்டுவாடா செய்துவிடும் திறன்படைத்தது.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சல்துறையில் அக்கவுண்ட் தேர்வுக்கான  பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே எழுத முடியும். மாநில மொழிகள் புறக்கணிப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி புறக்கணிப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், தேர்வு எழுதுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Selectors , Post Office, Accountant Selection, Language List, Tamil, Ignore
× RELATED பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அக்.1 முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்