×

டிரம்ப் ஆதரவாளர்களின் வெறித்தன தாக்குதலுக்கு மத்தியில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், இவரது வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். இதற்கிடையில், ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு கூடியது. அதில், தேர்வுக் குழு வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகள் எண்ணப்பட்டது. ஜோ பிடனுக்கு 206 வாக்குகளும் டிரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்தது. மேலும் சில மாநிலங்களில் உறுதியாகாமல் இருந்த ஜோ பிடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து  துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பிடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக ஜோ  பிடனை அதிபராக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், கைகளில் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டு கொண்டு, தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்து கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : victory ,supporters ,election ,United States , President of the United States, election, Jopitan, victory
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...