குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு!!

மும்பை: குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியது தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள ஜூஹூ பகுதியில் ’லவ் அண்ட் லட்’ என்ற பெயரில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. குடியிருப்பு வளாகமாக அமைந்திருந்த இந்த கட்டிடத்தை சோனு சூட் தற்போது ஹோட்டலாக மாற்றியுள்ளார். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என மும்பை மாநகராட்சி அளித்த புகாரில் பேரின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த புகாரை சோனு சூட் மறுத்துள்ளார். குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்துள்ள அவர், மாநகராட்சியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

கடலோர மேலாண்மைத்துறையின் அனுமதியை கூறியிருப்பதாகவும், கொரோனா காரணமாக அது தாமதமாகியுள்ளதாகவும் சோனு சூட் விளக்கமளித்துள்ளார். இதே தங்கும் விடுதி ஹோட்டலில்தான் கொரோனா ஊரடங்கின்போது ஊருக்குச் செல்ல முடியாமல் பரிதவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உணவும் அளித்து உதவி செய்தார். கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடைப்பட்டன. தங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>