×

வன்முறையை தூண்டும் வகையில் பதிவு...! அதிபர் டிரம்பின் முகநூல், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நியூயார்க்: வன்முறையை தூண்டும் வகையில் பதிவு செய்ததாக அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அடுத்த 12 மணி நேரம் டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இன்ஸ்டாக்ராம் கணக்கு 24 மனி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 12 மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வன்முறைக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : Trump , Register to incite violence ...! Freeze social networking sites, including President Trump's Facebook and Instagram
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...