பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றம் செய்யாமல் வாக்கு கேட்டு அதிமுக வரக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

மதுரை: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும்  ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அரசாணை வெளியிடக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில்  மதுரை பழங்காநத்தத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், பொங்கல் பரிசுத்தொகை, மாணவர்களுக்கான லேப்டாப் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும்  அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கும்போது, நாங்கள் ஏன்  பட்டியல் இனத்தில் இருக்க வேண்டும்? நலத்திட்டங்களை இரட்டிப்பாகவா கொடுத்தீர்கள்? எனவே, நாங்கள் பொதுப் பிரிவுக்கு மாறுவதில் என்ன தவறு? எங்களது கோரிக்கை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றம் மட்டுமே. இதனால் பாதிப்புகள் வந்தாலும், தாங்கிக் கொள்கிறோம்.  பட்டியலினத்திலிருந்து வெளியேற்றம் செய்யாமல் அதிமுக தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரக்கூடாது. இரட்டை குவளை முறையை ஒழிக்க, கலப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்வோரை தடுக்க இந்த அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Related Stories: