நகை வாங்குவது போல் கடையில் கம்மல் திருட்டு

ஆவடி:  ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் சுனில் (22). கடந்த 30ம் தேதி மதியம் சுனில், கடையில் 2 பெண்கள் கம்மல் வாங்க வந்துள்ளனர். பின்னர், இருவரும் பலவகை கம்மல் மாடல்களை பார்த்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் கம்மல் பிடிக்கவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். பிறகு சுனில், கம்மலை சரிபார்த்து உள்ளார். அப்போது, 8 கிராம் எடையுள்ள இரண்டு கம்மல் மாயமானது தெரியவந்தது. பின்னர், அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரு பெண்களில் ஒருவர் கம்மலை திருடியது தெரியவந்தது. புகாரின்படி போலீசார் வழக்குபதிந்து 2 பெண்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>