×

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்க புதிய கிடங்கு: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க புதியதாக கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு கிடங்கை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணி (கட்டிடம்) துறையின் சார்பில் தேர்தலுக்காக வாக்குசாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க புதிய பாதுகாப்பு கிடங்கு கட்டப்படுகிறது. கிடங்கின் கட்டுமான பணிக்காக 7.5 கோடி ஒதுக்கீடு செய்து, 1949 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.  இதில் வாக்கு சேகரிக்கும் இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள், வாக்கு கட்டுபாட்டு இயந்திரம் ஆகியவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைக்க தனித்தனி தரை மற்றும் 2 தளங்களுடன் வடிவமைத்து கட்டப்படுகிறது. புதிய கிடங்கை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், தேர்தல் தாசில்தார் ரபிக், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் உப்ட பலர் இருந்தனர்.



Tags : warehouse ,Collector inspection ,Sevilimet ,Kanchipuram , New warehouse to secure voting machines at Sevilimet near Kanchipuram: Collector inspection
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...