×

திரையரங்கில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை: பொது சுகாதாரத்துறை நிபுணர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள, திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என்று பொது சுகாதாரத்துறை நிபுணர் குகானந்தம் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தினசரி ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் தற்போது வரை 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கலுக்கு ஒரு சில படங்கள் வெளியாவதை தொடர்ந்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள  பொது சுகாதாத்துறை நிபுணர் குகானந்தம் அளித்த பேட்டி : திரையரங்குகளின் வடிவமைப்பின்படி, வெளி காற்று உள்ளே வராதப்படியும், உள்காற்று வெளியே செல்லாதப்படியும் இருக்கும்.

தனிமனித இடைவெளியின்றி, அனைவரும் ஒன்றாக அமரும்போது, ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்கு பரிந்துரைக்கவில்லை.
பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. பூஞ்சை களான்கள் வளர்ந்திருக்க கூடும். அவற்றை, சுத்தம் செய்ய வேண்டும். ‘ஏசி’ குழாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும். திரையரங்கில் காற்று உள்ளே வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளையும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட்டப்போது, மக்கள் எப்படி ஆர்வம் செலுத்தவில்லையே, அதேபோன்று தற்போதும் திரையரங்கம் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Medical Expert Panel ,theater , Theaters, 100 percent, seating, admission
× RELATED மக்களவைத் தேர்தலை முன்னிட்டு...