×

பணியிடத்தை நிரப்பாவிட்டால் பார்மசிஸ்ட் சான்று ஒப்படைப்பு: ஆயுஷ் மாணவர்கள் முடிவு

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருந்தாளுநர் காலியிடங்களை நிரப்பாவிட்டால் சான்றிதழை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 405 மருந்தாளுநர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் ஒன்னரை ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இதையடுத்து நேற்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறியதாவது: பார்மசிஸ்ட் பணியிடத்தை நிரப்ப மறுத்துவருகின்றனர். ஒரு மாதத்திற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அதன்பிறகு காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என்றால் நாங்கள் படித்த சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : AYUSH , Pharmacist, handover, AYUSH students, results
× RELATED மிகக்குறைந்த கட்டணத்தில் தஞ்சாவூர்...