×

ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பெய்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் அதிக ஈரப்பதம் கொண்டதாக இருப்பதால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை.  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். உழவர்களின் நலன் கருதி இப்போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதை தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

Tags : Ramadas , Moisture, Paddy Procurement, ramadass , Assurance
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்