×

விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பம் எதிரொலி: தமிழக அரசு பணியிலிருந்து சகாயம் ஐஏஎஸ் விடுவிப்பு

சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து சகாயம் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். சகாயம் ஐஏஎஸ், மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் முறைகேடுகளை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது அப்போதைய அதிமுக ஆட்சிக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இதையடுத்து சகாயம் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக நியமிக்கப்பட்டார். அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அது கருதப்பட்டது.

இந்த பதவியில் சகாயம் ஐஏஎஸ், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். எந்த முக்கியத்துவமும் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்டதால் விரக்தி அடைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி, தமிழக அரசு பணியில் இருந்து தன்னை விடுக்க வேண்டும். தான் விருப்ப ஓய்வு பெறுகிறேன்\\” என் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், அரசு பணியில் இருந்து சகாயம் ஐஏஎஸ் கடந்த 2ம் தேதி (ஜனவரி 2) முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  அவர், ஏற்கனவே `மக்கள் பாதை’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தற்போது அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பணியில் முழு அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Sakayam IAS ,Tamil Nadu , Optional retirement, Sakayam IAS, release
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...