தாய் சிபிசிஐடி விசாரணை கோரிய நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா(26). இவர் டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆனதால் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் மற்றும் ேஹம்நாத்தின் பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, நசரத்பேட்டை போலீசார் ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ 250 பக்கம் கொண்ட தனது விசாரணை அறிக்கையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், சித்ராவின் தாய் விஜயா தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அரசியல் பின்னணியில் பலர் உள்ளதாக சந்தேகம் உள்ளது. இதனால், எனது மகள் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் தலைமை செயலாகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதைதொடர்ந்து, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து நசரத்பேட்டை இன்ஸ்ெபக்டர் விஜயராகவன் வழக்கு தொடர்பாக ஆவணங்களை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Related Stories:

>