×

கொரோனா தடுப்பூசி போட பயன்படும்: 28 லட்சம் ‘நீடில்கள்’ மாவட்டங்களுக்கு விநியோகம்: தயார் நிலையில் விநியோக மையங்கள்: கிராமங்களுக்கு சிறப்பு வாகனங்கள்

சென்னை: கொரோனா தடுப்பூசி போட பயன்படும் 28 லட்சம் ‘நீடில்’கள் மாவட்டங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி மையங்களும் தயாராக உள்ளது. இந்தியாவில் வரும் 13ம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகையும் நடந்து முடிந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகளை சேமிக்கவும், மாநிலம் முழுவதும் விநியோகிக்கவும் தமிழக சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு மையம், சேலம், திருச்சி,  கோவை கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை,  நெல்லை, வேலூர், மதுரை ஆகிய மண்டல சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் பெற்றப்படும் தடுப்பூசிகள் வாக்கிங் கூலர் மற்றும் வாக்கிங் பிரீசர் என 2வகையான மையங்களில் பதப்படுத்தப்படுகிறது.
இந்த மையங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையில் தடுப்பூசிகளை குளிர்ந்த நிலையில் வைக்க முடியும். இதற்காக குளிர்சாதன பெட்டிகள் அடங்கிய பிரத்யோக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல 50க்கும் மேற்பட்ட வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது. மின் துண்டிப்பு ஏற்பட்டால் 5 வினாடிக்கு முன்னதாகவே ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும். 24மணி நேரமும், தடுப்பூசிகளை கையாளும் சுகாதார பணியாளர்களும், உதவியாளர்களும் பணியில் இருப்பார்கள். இதைத்தவிர்த்து முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட பயன்படும் 28 லட்சம் ‘நீடில்’கள் மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags : districts ,villages ,distribution centers , corona , vaccine
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை