மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 3 பெண்கள் மீட்பு: புரோக்கர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் 6வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக திருவான்மியூர் போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பியூட்டி பார்லரில் இருந்த பாலாஜி(31) பிடித்து விசாரித்தபோது, அவர் அந்த பார்லரில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

அவருடன் இருந்த 3 இளம்பெண்களை மீட்டனர். பாலாஜியை நேற்று முன்தினம் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 3 பெண்களை மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories:

>