இரண்டு கோயில்களில் திருட்டு

மைசூரு: மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா சிக்ககொப்பலு கிராமத்தில் உள்ள கிராமதேவதை ஆதிசக்தி முத்தாலம்மா மற்றும் வீரபத்ரேஷ்வரா ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளது. மர்மநபர்கள் இந்த கோயில்களில்  பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிசென்றனர். முத்தாலம்மா கோயிலில் அம்மனின் தங்க தாலி, 250 கிராம் வெள்ளி, உண்டியல் பணம் என ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும், வீரபத்ரேஷ்வரா கோயிலில் 1500 கிராம் வெள்ளி,  லிங்கம் மற்றும் உண்டியல் பணம் ரூ. 12 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கே.ஆர்.புரா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>