×

குமாரசாமி, சித்தராமையா கர்நாடகாவின் கோமாளிகள்: மேலவை உறுப்பினர் எச். விஷ்வநாத் பட்டம்

பெங்களூரு: முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் கர்நாடகவின் கோமாளிகள். மக்கள் இவர்களை கோமாளிகளாக தான் பார்க்கின்றனர் என்று பா.ஜ. மேலவை உறுப்பினர் எச். விஷ்வநாத் தெரிவித்தார்.
பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் பவனில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக எச். விஷ்வநாத் கூறியதாவது: ``மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது. கட்சி மேலிடம் எப்போது அனுமதி வழங்குகிறதோ அப்போது அது நடக்கும். இதனால் தினமும் இது தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். நான் மூத்தவனாகவும், என்னுடைய அனுபவத்தின் ஆதாரத்தின் மீது தெரிவிக்கிறேன்.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு பாடம் நடத்த நான் தயாராகவுள்ளேன். அவர் எந்த போராட்டம் நடத்தியுள்ளார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார் என்பது குறித்து அவருக்கு அப்போது தெரிவிக்கப்படும். அதேபோல், மஜதவிலிருந்து காங்கிரஸ் வந்த போது சித்தராமையாவை நாங்கள் முதல்வர் பதவிக்கு அழைத்து வந்தோம். இதை அவர் மறந்து பேசி வருகிறார். முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் கர்நாடகாவின் கோமாளிகள். இவர்கள் எதற்கு பேசுகிறார்கள், எதை பேசுகிறார்கள் என்று புரியவில்லை. இதனால் இவர்களை மக்கள் கோமாளிகள் போல் பார்க்கின்றனர் என்றார்’’.

Tags : Chidramaiah ,Clowns ,Karnataka ,Vishwanath , Kumaraswamy, Chidramaiah Clowns of Karnataka: Member of the Upper House H.P. Vishwanath degree
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!