சிவகுமாரை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பாஜ மீது தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்: சித்தராமையா மீது நளின்குமார் கட்டீல் காட்டம்

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா தினமும் விவாதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ. மீது தேவையில்லாத குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்று பா.ஜ. மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.

தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நளின்குமார் கட்டீல் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது, ``முன்னாள் முதல்வர் சித்தராமையா தினமும் எதாவது ஒரு கருத்து தெரிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியில் அவரை ஒழித்து விடுவார்கள். இதனால் பா.ஜ. மீது தேவையில்லாத குற்றசாட்டுகளை தெரிவித்து நானும் அரசியலில் இருந்து வருகிறேன் என்று காட்டி வருகிறார்.  சித்தராமையாவுக்கு பசுவதை சட்டம், ஆர்.எஸ்.எஸ். மீது கோபம் கிடையாது. கட்சியில் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க டி.கே.சிவகுமார் மீது உள்ள கோபத்தை பா.ஜ. மீது காட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் டி.கே.சிவகுமாருக்கு செல்வாக்கு அதிகரித்து அனைத்து பகுதியிலும் அவர் சென்று வருகிறார். இதனால் சித்தராமையா இப்படி எல்லாம் செய்து வருகிறார். சிவகுமாரை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தராமையா தினமும் பா.ஜ. தலைவர்கள் மீது குற்றசாட்டுகள் தெரிவித்து வருகிறார். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகவுள்ளது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பல்வேறு பணிகள் அதிகமாகவுள்ளது. அவர்கள் அனைத்து சமூகத்தையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்’’.  சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகவுள்ளது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.

Related Stories:

>