×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து: வரும் 14-ம் தேதி ஜே.பி. நட்டா வர வாய்ப்பு?.

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணி வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சையும், மோதலும் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது அவர் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 100 தொகுதிகளுக்கான பட்டியலையும் அளித்தார். இதனை இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக 34 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதித்தது. இதனால், கூட்டணி உருவாவதில் தொடர்ந்து சிக்கல் உருவாகி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வருகிற 14ம் தேதி சென்னை வர உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னை வரும் அமித்ஷா சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தையை அமித்ஷா நடத்துவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமித்ஷாவிற்கு பதிலாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வருகை செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.



Tags : Amit Shah ,visit ,Chennai , Union Home Minister Amit Shah's visit to Chennai canceled: J.P. Natta is likely to come ?.
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...