×

முதல்வரின் பிரச்சார பயணத்தால் போக்குவரத்து நெரிசல்: 6 மணி நேரத்திற்கு முன்பே நகரில் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு: முதலமைச்சரின் பயணம் காரணமாக சத்தியமங்கலம் நகரில் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் இருந்தாலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே பிரசாரத்தை துவக்கி விட்டன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோட்டில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவத்தையொட்டி அந்த நகர் முழுவதும் தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள இந்த பெயர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோன்று அளவு வாகனங்கள் சென்றுவரும் பேருந்து நிலைய பகுதியில் உள்ள தடுப்புகளை காலை 11 மணி அளவில் காவல்துறையினர் அகற்றினர். இந்த பணியின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பாடு வாகன ஓட்டிகளை கடும் அவதிக்குள்ளாக்கின.

மேலும் நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகன ஓட்டிகள் புறநகர் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Tags : campaign trip ,Chief Minister ,city , Traffic congestion due to the Chief Minister's campaign trip: Traffic change in the city before 6 p.m.
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...