ரஜினிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டாம் :சினோரா அசோக் வலியுறுத்தல்

சென்னை, :தென்சென்னை (கிழக்கு) மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சினோரா அசோக் அறிக்கை: நம் தலைவர் ரஜினியின் ரசிக சொந்தங்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், காவலர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். தன்னை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்தான், தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தற்போது அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வர இயலவில்லை.

இச்சூழ்நிலையை புரிந்துகொண்டு, ரஜினியின் உண்மையான ரசிகர்களாகிய நாம், அவரை கட்டாயப்படுத்தும் மற்றும் அவப்பெயரை உருவாக்கும் எந்தவொரு கூட்டத்திலும், அறவழி போராட்டங்களிலும், பேரணிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என வலியுறுத்துகிறேன். 

Related Stories:

>