×

‘கோவாக்சின்’ சர்ச்சைக்கு மத்தியில் பாஜ எம்எல்ஏவுக்கு முதல் தடுப்பூசி

பாட்னா: கோவாக்சின் தடுப்பூசி சர்ச்சைக்கு மத்தியில் பீகாரில் பாஜக எம்எல்ஏ அந்த தடுப்பூசிைய முதன்முறையாக போட்டுக் கொண்டார்.கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ஒரு வாரத்தில்  பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பீகார் மாநிலம்  பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட  பரிசோதனை நடந்து  கொண்டிருக்கிறது. இதுவரை 1,200க்கும் மேற்பட்டவர்களுக்கு  இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் தயாரித்த இந்த தடுப்பூசியை முதன்முறையாக திகா தொகுதி பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சவுராசியா போட்டுக் கொண்டார்.

அப்போது சஞ்சீவ் சவுராசியா கூறுகையில், ‘இந்த தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் விஞ்ஞானிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். பிரதமர் மோடிக்கும் நன்றி கூறுகிறேன். தடுப்பூசி குறித்து எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.  இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இந்த தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் இல்லை. மக்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

முன்னதாக கோவாக்சின் தடுப்பூசி குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகின்றன. அந்த தடுப்பூசியின் முழுமையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே பாஜக எம்எல்ஏ  முதன்முறையாக கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP MLA ,Kovacs , First vaccination for BJP MLA amid ‘Kovacs’ controversy
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...