ஆட்டோ ஓட்டுனரும் நாய்க்குட்டியும்

புனேவைச் சேர்ந்த மஞ்ஜிரியின் முகநூல் பதிவுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். தனது சகோதரியுடன் மஞ்ஜிரி ஒரு ஆட்டோவில் பயணித்திருக்கிறார். ஓட்டுநருக்கு உண்டான கட்டணத்தைக் கொடுக்கும்போது அவர் கண்ட காட்சியில் அசந்து போய்விட்டார். ஆம்; ஓட்டுநரின் இருக்கைக்கு கீழே ஒரு நாய்க்குட்டி இருந்திருக்கிறது. இதுபற்றி ஓட்டுநரிடம் மஞ்ஜிரி விசாரித்திருக்கிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் ரூனி. ஓட்டுநரின் மகன் ரூனியை வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறான். அவன் எங்கேயாவது போய்விட்டால் ரூனியைக் கவனிக்க வீட்டில் ஆளில்லை. அதனால் தன்னுடனே ரூனியை அழைத்து வந்துவிடுகிறார் அந்த ஓட்டுநர்.  அவர் வேலை முடியும் பயணத் தோழனாக ரூனி உடன் வரும். இதை அப்படியே முகநூலில் மஞ்ஜிரி பதிவு செய்ய, ஹார்ட்டின்கள் குவிகின்றன.

Related Stories:

>