×

திருமணத்திற்காக மதம் மாறுவதை எதிர்த்து உ.பி., உத்திரகாண்ட் மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: திருமணத்திற்காக மதம் மாறுவதை எதிர்த்து உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க ஆளும் உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மதம் மாறி திருமணம் செய்பவர்களை தண்டிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மத்திய பிரதேச அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த மதமாற்ற தடை சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என கூறி உச்சநீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமணத்திற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அடக்குமுறையின் உச்சக்கட்டம் எனவும், ஆதனால் இச்சட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இதனை ஏற்க மறுக்க நீதிபதிகள் மாநில அரசின் பதிலை கேட்காமல் மத மாற்றத் தடை சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறினர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மத மாற்ற தடை சட்டம்:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை, மத மாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, நேர்மையற்ற முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம். இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

Tags : Supreme Court ,UP ,Uttarakhand , Prohibition of Conversion Act, Supreme Court, UP, Uttarakhand, Reply
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...