செங்கரும்பு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு: முளைத்த நெற்பயிரை கயிறு கட்டி காய வைக்கும் அவலம்

திருப்பூர்: பொங்கல் பரிசுக்காக உள்ளூர் விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்யவில்லை என கரும்பு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்த நெற்பயிரை கயிறு கட்டி காய வைக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் பருவம் வந்துள்ள நிலையில் வழக்கம் போல பொங்கல் பரிசுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் வராததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தாராபுரம் நியாயவிலை கடைகளில் புஞ்சை பிடித்த மற்றும் காய்ந்த கரும்பு வழங்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவான நிலையில் அரசு தங்களிடம் கரும்பை கொள்முதல் செய்தால் தான் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் கூறினர். இதனிடையே முண்டியம்பாக்கம், கரும்பு விவசாய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் முண்டியம்பாக்கம், சேம்பேடு, ஆலைகள் 10 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்காதது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதை பொங்கலுக்குள் வழங்கவும், டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பருவம் தவறி பெய்யும் தொடர் மழையால் வயலில் முழங்கால் அளவு தேங்கிய நீரில் நெற்பயிர்கள் முளைத்துவிட்டன. நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் வயலில் கயிறு கட்டி காய வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

Related Stories:

>