உருமாறிய கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகல் குறித்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் ராம்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.

மனுவில், இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், பிற உலக நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, உரிய வகையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் கூறி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றதா என்று கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18 ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழுவின்  ஆலோசனையை பெற மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என மத்திய அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>