மேற்கு வங்கத்தில் நீர்வழிப் போக்குவரத்து மேம்படுத்த 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டம்: உலக வங்கியுடன் ஒப்பந்தம்.!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நீர்வழிப் போக்குவரத்து மேம்படுத்த 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தை செயலபடுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத் திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு வங்கம் கொல்கத்தாவில், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து,  தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில தளவாட துறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.

இந்த ஒப்பந்தத்தில், மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் மொகபத்ரா, மேற்கு வங்கம் சார்பில் துணை ஆணையர் திரு ராஜ்தீப் தத்தா,  உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவு இயக்குனர் திரு ஜூனைத் அகமது ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இத்திட்டம், மேற்கு வங்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்  அல்லது 30 மில்லியன் பேர் வசிக்கும் கொல்கத்தா மெட்ரோ பகுதி உட்பட இந்தத் திட்டம் மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு வங்கத்தின் 5 தென் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

Related Stories:

>