வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை திறப்பது எப்போது?5 ஆண்டுகளாக ஜவ்வாய் இழுக்கும் பணிகள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை அமைக்கும் பணி 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை வேலைகள் 2015ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இன்று வரை பணிமனைக்கான வேலை முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை அமைந்தால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், பிளவக்கல் அணை மற்றும் கிராமபுறங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக இருக்கும். இதே போன்று தேனி, சென்னை, கோவை, திருச்செந்தூர், நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கும் அரசு விரைவு பேருந்து இயக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.

ஆனால் பணிகள் 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதோடு போக்குவரத்து பணிமனை முன்பு பஸ்கள் நிறுத்தும் இடங்கள் சமப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே  விரைந்து போக்குவரத்து பணிமனை வேலையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>