×

தேர்தலுக்கு முன் முதல்கட்ட பணிகளை முடிக்க ஊட்டியில் அசுர வேகத்தில் நடக்கும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி

ஊட்டி :  தேர்தல் அறிவிப்பு வரும் முன் முதல்கட்ட பணிகளை முடிக்க  ஊட்டியில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்ைக விடுத்து வந்தனர்.
இதன் விளைவாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. நீலகிரி மாவட்ட எம்.பி.யாக உள்ள ராசா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, நீலகிரியில் மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என கடிதம் கொடுத்தார்.

இதன் விளைவாக நீலகிரி மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து ஊட்டி அருகேயுள்ள எச்.பி.எப். பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. மத்திய மாநில அரசு நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த மருத்துவக் கல்லூரி அமைவதற்கு அதிமுக.,வும் காரணம் என ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலின் போது, மருத்துவக் கல்லூரி வருவதற்கு தாங்கள் தான் காரணம் என கூறி, ஓட்டு கேட்பதற்காக முதற்கட்ட பணிகளை முடிக்க அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதனால், மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

Tags : Ooty ,election ,phase , Ooty: The construction work of the medical college in Ooty is in full swing to complete the first phase before the announcement of the election
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்