கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரமாக பரவும் பறவைக்காய்ச்சல்...! தமிழகத்துக்கும் பரவக்கூடும்: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து கண்காணிக்கும் வகையில் டெல்லியில் கட்டுப்பட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பல்வேறு இடங்களில் கோழி, வாத்து உள்ளிட்ட 23,000 பறவைகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகம், பஞ்சாப், கர்நாடகத்துக்கு பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் குறித்து தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சறுத்தி வரும் நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் பறவைக் காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன. கேரளாவில் பாதிப்பு கேரளாவில் பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களில் பறவை காய்ச்சல் காரணமாக 12,000 வாத்துகள் இருந்துள்ளன.

பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டெல்லியில் மத்திய கால்நடை வளர்ப்புத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் தற்போது பரவியுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திற்கும் இந்த பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவும் அபாயம் உள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>