பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது : தேசிய அளவில் #பெண்களின்_எதிரி_அதிமுக ஹேஷ்டேக் ட்ரெண்டிங்!!

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில், #பெண்களின்_எதிரி_அதிமுக என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 2019 –ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவங்களை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. பல வீடியோக்கள் அந்தச் சம்பவம் பற்றி வெளியாகின. “அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. பத்திரிகை-தொலைக்காட்சி-சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின.

இந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் காப்பாற்ற பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் முயற்சி எடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொள்ளாச்சிக்கே சென்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இந்நிலையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இன்று இந்த வழக்குத் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர்களின் அருளானந்தமும் ஒருவர். இவர் ஆளுங்கட்சியான அதிமுகவின் பொள்ளாச்சி மாணவரணி செயலாளர். அதனால், கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உடனே அதிமுக தரப்பில் அருளானந்ததைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.கொடூரமான இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைதாவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில், நண்பர்களோடு சேர்ந்துதான் பெண்களை பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகரின் நண்பர்கள் அநேகர் அக்கட்சியினராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

Related Stories:

>