×

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.: மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத்தை நாசரத்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று சிறையில் உள்ள ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஹேம்நாத்தை, மத்திய குற்றப்பிரிவினர், மோசடி வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர். 2 நாள் விசாரணை முடிவில் தான் ஹேம்நாத் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சிசிபிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சித்ரா தற்கொலை வழக்கை சிசிபிஐடி விசாரிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Chitra ,Central Criminal Police , Screen actress Chitra commits suicide: Transfer to Central Criminal Police
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?