ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி பட்டமளிப்பு விழா

சென்னை: ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று காலை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் பாரத கலாக்ஷேத்ரா கலையரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், தமிழக தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழா, காலை 9 மணிக்கு பூஜையுடன் தொடங்கி, தமிழ்த்தாய் வாழ்த்து, பிரார்த்தனை, சுலோக ஜபம், வரவேற்புரைக்கு பின்பு பாராட்டுரை மற்றும் ஆண்டு அறிக்கை வாசிக்கப்படுதல், தொடர்ந்து கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் வழங்கும் பட்டமளிப்பு உரை நிறைவடைந்ததும், பட்டயம்/பட்டய மேற்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுதல், ரொக்கப் பரிசுகள் வழங்குதல், கவுரவ விருந்தினரின் சிறப்புரை, நன்றியுரை, தேசிய கீதம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவடையும், என கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் எஸ்.ராமதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>